×

மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர்கள் 33,34,786 பேர்: அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4,52,568 பேர்; குறைந்தபட்சமாக பொன்னேரி தொகுதியில் 2,52,774 பேர்

திருவள்ளூர், அக். 28: திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல்நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் வெளியிட்டார். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கும்மிடிப்பூண்டி தொகுதியில் மொத்தம் 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,30,838, பெண் வாக்காளர்கள் 1,37,209, பிற பாலினத்தவர் 41 என மொத்தம் 2,68,088 வாக்காளர்கள் உள்ளனர். பொன்னேரி தொகுதியில் மொத்தம் 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,23,627, பெண் வாக்காளர்கள் 1,29,120, பிற பாலினத்தவர் 27 என மொத்தம் 2,52,774 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் திருத்தணி தொகுதியில் மொத்தம் 330 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,32067, பெண் வாக்காளர்கள் 1,35,775, பிற பாலினத்தவர் 30 என மொத்தம் 2,67,872 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவள்ளூர் தொகுதியில் மொத்தம் 296 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,25,937, பெண் வாக்காளர்கள் 1,31,851, பிற பாலினத்தவர் 23 என மொத்தம் 2,57,811 வாக்காளர்கள் உள்ளனர். பூந்தமல்லி தொகுதியில் மொத்தம் 390 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,77,546, பெண் வாக்காளர்கள் 1,84,628, பிற பாலினத்தவர் 69 என மொத்தம் 3,62,243 வாக்காளர்கள் உள்ளனர். ஆவடி தொகுதியில் மொத்தம் 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 2,13,428, பெண் வாக்காளர்கள் 2,18,386, பிற பாலினத்தவர் 94 என மொத்தம் 4,31,908 வாக்காளர்கள் உள்ளனர்.

மதுரவாயல் தொகுதியில் மொத்தம் 440 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 2,09,820, பெண் வாக்காளர்கள் 2,07,218, பிற பாலினத்தவர் 119 என மொத்தம் 4,17,157 வாக்காளர்கள் உள்ளனர். அம்பத்தூர் தொகுதியில் மொத்தம் 350 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,75,598, பெண் வாக்காளர்கள் 1,76,187, பிற பாலினத்தவர் 78 என மொத்தம் 3,51,863 வாக்காளர்கள் உள்ளனர். மாதவரம் தொகுதியில் மொத்தம் 467 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 2,24,767, பெண் வாக்காளர்கள் 2,27,692, பிற பாலினத்தவர் 109 என மொத்தம் 452568 வாக்காளர்கள் உள்ளனர்.

திருவொற்றியூர் தொகுதியில் மொத்தம் 311 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 1,34,315, பெண் வாக்காளர்கள் 1,38,057, பிற பாலினத்தவர் 130 என மொத்தம் 272502 வாக்காளர்கள் உள்ளனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 3,665 வாக்குச்சாவடிகளில் ஆண் வாக்காளர்கள் 16 லட்சத்து 47 ஆயிரத்து 943 பேரும், பெண் வாக்காளர்கள் 16 லட்சத்து 26 ஆயிரத்து 123 பேரும் மாற்று பாலினத்தவர்கள் 720 பேரும் என் மொத்தம் 33 லட்சத்து 34 ஆயிரத்து 786 பேர் வாக்காளர்களாக உள்ளனர். மேலும் 1.1.2024ம் தேதியன்று 18 வயதை பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6ம், பெயர் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்துப் பிழைகள் முகவரி மாற்றம் மற்றும் தொகுதி மாற்றம் ஆகியவற்றுக்கு படிவம் 8ஐ தங்களது குடியிருப்புக்கு அருகில் உள்ள நியமிக்கப்பட்டுள்ள இடங்கள், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளிகளில் அனைத்து வேலை நாட்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களான 4.11.23, 5.11.23, 18.11.23, 19.11.23 ஆகிய நாட்களில் கடிதங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது http://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் தெரிவித்தார். இச்சந்திப்பில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வி.மாலதி மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

n 16,47,943 ஆண் வாக்காளர்கள்.
n 16,26,123 பெண் வாக்காளர்கள்.
n 720 இதர வாக்காளர்கள்

வ.
எண் தொகுதியின் பெயர் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை ஆண் பெண் மாற்று பாலினத்தவர் மொத்தம்
1. கும்மிடிப்பூண்டி 330 1,30,838 1,37,209 41 2,68,088
2. பொன்னேரி 311 1,23,627 1,29,120 27 2,52,774
3. திருத்தணி 330 1,32,067 1,35,775 30 2,67,872
4. திருவள்ளூர் 296 1,25,937 1,31,851 23 2,57,811
5. பூந்தமல்லி 390 1,77,546 1,84,628 69 3,62,243
6. ஆவடி 440 2,13,428 2,18,386 94 4,31,908
7. மதுரவாயல் 440 2,09,820 2,07,218 119 4,17,157
8. அம்பத்தூர் 350 1,75,598 1,76,187 78 3,51,863
9. மாதவரம் 467 2,24,767 2,27,692 109 4,52,568
10. திருவொற்றியூர் 311 1,34,315 1,38,057 130 2,72,502
மொத்தம் 3,665 16,47,943 16,26,123 720 33,34,786

The post மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு மொத்த வாக்காளர்கள் 33,34,786 பேர்: அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4,52,568 பேர்; குறைந்தபட்சமாக பொன்னேரி தொகுதியில் 2,52,774 பேர் appeared first on Dinakaran.

Tags : Madhavaram ,Ponneri ,Tiruvallur ,Thiruvallur district ,
× RELATED திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான...